மிர்தம் எடுப்பதற்காக வாசுகிப் பாம்பை கயிறாய்க் கொண்டு அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட காமதேனு என்ற பசு, வெள்ளைக்குதிரை, யானை மற்றும் கற்பக விருட்சத்தை தேவர் களின் தலைவனான தேவேந்திரன் எடுத்துக் கொண்டார். அப்சரஸ்திரீகளை அசுரர்கள் ஏற்றுக்கொண்டனர். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாய் எடுத்துக்கொண்டார். அந்தப் பெண்ணை பின்னாளில் கௌதம முனிவர் மணம்முடித்தார். திருமகள் எனும் லட்சுமி தேவியை மகாவிஷ்ணு தன் மார்பில் அமர்த் திக்கொண்டார்.

Advertisment

இறுதியாக அமிர்தக்கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி பகவானிடமிருந்து அசுரர்கள் அமிர்தக் கலசத்தைப் பறித்துச் சென்றனர். அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பது குறித்து அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது. இதனால் அமிர்தம் யாருக்கும் கிடைக்காமல் வீணாகிவிடும் நிலை உருவானது. எனவே தேவர்கள் மகா விஷ்ணுவிடம் சென்று அமிர்தக் கலசத்தை மீட்டுத்தருமாறு வேண்டினர். உடனே மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடம் சென்று, "தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சரிபாதியாய்ப் பங்கிட்டுத் தருகிறேன்' என்று கூறியதும், மோகினியின் அழகில் மயங்கி அமிர்தக் கலசத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.

அமிர்தக் கலசத்தை வாங்கிய மோகினி அசுரர்களையும் தேவர்களையும் இரு வரிசையாக நிற்கச்சொன்னார். பின்னர், "முதலிலில் எந்த வரிசையினருக்குக் கொடுக் கட்டும்?' என்று கேட்டார். அதற்கு அசுரர்கள், அமிர்தக் கலசத்தின் அடிப்பாகத்திலுள்ள அமிர்தத்தை தங்களுக்கும், மேற்பகுதியில் தெளிந்து நிற்கும் அமிர்தத்தை தேவர் களுக்கும் வழங்கலாம் என கூறினர்.

அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கினார் மோகினி. அளவுக்கு அதிக மாகவே தேவர்களுக்கு வழங்கப்பட்டது. மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர் பானு என்ற அசுரன் தேவர்களைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டு தேவர் களின் வரிசையில் நின்றான். அதனையறி யாமல் மோகினி சுவர்பானுவுக்கு தெளிந்த அமிர்தத்தை வழங்கினார்.

Advertisment

அமிர்தம் கிடைத்தவுடன் அதை உடனடியாகப் பருகிவிட்டான் சுவர் பானு. இதை கவனித்த சூரியனும் சந்திரனும் சுவர்பானு ஒரு அசுரன் என்பதை மோகினிக்கு உணர்த்தினார்கள். உடனே மோகினி அமிர்தம் வழங்கு வதற்காக வைத்திருந்த கரண்டியைக்கொண்டு சுவர் பானுவின் தலையைத் துண்டித்தார். உடல் வேறு, தலை வேறாகப் பிரிந்தாலும் அமிர்தம் உண்ட காரணத்தால் சுவர்பானுவுக்கு மரணம் ஏற்படவில்லை. மேலும் துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு ஐந்து பாம்புத் தலையும் முளைத்தன. சுவர்பானு உருமாறி வந்த காரணமறிந்த மோகினி அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க மறுத்துவிட்டார். இதனால் சுவர்பானுமீது கோபம் கொண்ட அசுரர்கள், சுவர்பானுவைத் தங்கள் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறுபட்ட உடலமைப்பைக் கொண்ட சுவர்பானுவை தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

raghu-kethu

இதனால் மிகுந்த வருத்தமடைந்த சுவர்பானு பிரம்மதேவனைத் தஞ்சம் அடைந்தார். தனக்கு பழைய உடலமைப்பு வேண்டுமென்று கேட்டார். அதற்கு பிரம்ம தேவனோ, ""நாராயணனால் தண்டிக்கப்பட்ட உன்னை பழைய நிலைக்கு மாற்ற இயலாது. எனவே இரு வேறு உடலமைப்பு கொண்டவனாக இருப்பாய். மனிதத் தலையும் பாம்பின் உடலும் கொண்ட அமைப்பு ராகு என்றும், மனித உடலும் பாம்பின் தலையும் கொண்ட அமைப்பு கேது என்றும் அழைக்கப்படுவாய்'' என்றார். இதை யடுத்து பிரம்மாவிடம், ""சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்ததால்தான் எனக்கு இந்நிலை ஏற்பட்டது. எனவே அவர்களைப் பழிவாங்குவதற்கு அருள்புரிய வேண்டும்'' என்றான் சுவர்பானு. "அப்படி செய்யக்கூடாது' என்று பிரம்ம தேவன் எடுத்துரைத்தும் சுவர்பானு சமாதானமடையவில்லை. அப்போது, ""நவகிரகப் பரிபாலனத்தில் இணையும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்து வீர்கள். மேலும் நீங்கள் இருவரும் முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கி சஞ்சாரம்செய்ய வேண்டும்'' என்று பிரம்மன் அருள்புரிந்தார்.

அச்சமயம் மகாவிஷ்ணு தோன்றி, ""ராகுவையும் கேதுவையும் உடனடியாக கிரக சஞ்சாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது. அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் அசுரன் ஒருவனை இப்படி ஈடுபடுத்துவது சரியாகாது. அவ்வாறு செய்தால் அசுரர்களின் பலம் அதிகரிக்கும். கடைசி அசுரரான இராவணன் அழியும்வரை கேது கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜுர், சாம வேதங்களையும், ராகு மகர ராசியில் அமர்ந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் வழியாகக் கற்றுணர்ந்து கொள்ளட்டும். இரா வணன் அழிவுக்குப் பிறகு ஞானம்பெற்ற ராகு ஞானகாரகனாகவும், கேது மோட்சகார கனாகவும் செயல்பட்டு, பூமியில் தோன்றிய உயிர்களுக்கு அவரவர் கர்மவினையின்படி ஞானம் மற்றும் மோட்சத்தைப் பெற அனுக் கிரகம் செய்யட்டும்'' என்றார். அதன்படியே இராவணன் அழிக்கப்பட்ட பின்னர் கேதுவும் ராகுவும் நவகிரக மண்டலத்தில் கிரக அந்தஸ்து பெற்று சாயாகிரகமாக (நிழல்) வலம்வரத் தொடங்கினர்.

கேது தோஷமும் பரிகாரமும்

கேது திருமணத்தடையை ஏற்படுத்துவார். குழந்தை பாக்கியத்தைத் தாமதப்படுத்துவார். கேது பன்னிரண்டில் இருந்தால் மோட்சம் தருவார். விநாயகரை அறுகம்புல் மாலை யிட்டு வணங்கிவர கேது தோஷம் விலகும்.

சித்திரகுப்தன் ஆலயம் சென்று வழிபட்டாலும் கேதுவினால் ஏற்படும் தோஷம் விலகும்.

ராகு தோஷமும் பரிகாரமும்

ராகு 2-ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது. ராகு 4-ல் இருந்தால் மனை தோஷம் ஏற்படும். ராகு 7-ல் இருந்தால் திருமண தோஷம் ஏற்படும். இதற்கு கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், புதுக் கோட்டை பக்கமுள்ள பேரையூர், பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில், சங்கரன் கோவிலிலுள்ள சங்கரநயினார்- கோமதி யம்மன் கோவில், நாகர்கோவிலிலிலுள்ள நாக ராஜா கோவில் சென்று வணங்கிவர ராகு தோஷம் நிவர்த்தியாகும். அரசமரமும் வேப்ப மரமும் உள்ள இடத்தில் சர்ப்பகிரகத்தைப் பிரதிஷ்டை செய்துள்ள தலத்திற்குச் சென்று வழிபட்டாலும் தோஷம் நிவர்த்தியாகும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை யம்மனை வழிபட்டாலும் தோஷ நிவர்த்தி உண்டு.

செல்: 94871 68174